ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல்

🕔 November 21, 2023

ரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை டிசம்பர் பண்டிகைக் காலத்துக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்தில் இந்தத் தகவலை அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்டார்.

ஒரு லட்சம் மெட்ரிக் தொன் கீரி சம்பா அல்லது சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவைத் தீர்மானத்தின் படி, அடுத்த சில நாட்களில் அரிசியை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று நடைபெற்ற (20) ஊடக சந்திப்பில் அமைச்சர் நளீன் பெனாண்டோ தெரிவித்திருந்தார்.

இவ்வாறான விலையேற்றம் நீண்டகாலமாக பாரிய ஆலை உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நிரந்தர தீர்வை வழங்குவது தொடர்பில் நேற்று அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்