தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்குமாறு அழைப்பு

🕔 November 16, 2023

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இன்று (16) தொடக்கம் முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க முடியும்

இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி வரை அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர், குறித்த ஆணைக்குழுவில் தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: தேர்தல் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்