தேர்தல் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

🕔 October 18, 2023

தேர்தல் முறைமையில் சீர்திருத்தங்களை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 09 உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

திங்கட்கிழமை (ஒக்டோபர் 16) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு:

01) சுந்தரம் அருமைநாயகம்
02) சேனநாயக்க அலிசந்தரலாகே
03) நளின் ஜயந்த அபேசேகர PC
04) ராஜித நவீன் கிறிஸ்டோபர் சேனாரத்ன பெரேரா
05) அஹமட் லெப்பை மொஹமட் சலீம்
06) சகாரிகா டெல்கொடா
07) எஸ்தர் ஸ்ரீயானி நிமல்கா பெர்னாண்டோ
08) விதாரணகே தீபானி சமந்தா ரொட்ரிகோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்