அல் ஷிபா வைத்தியசாலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் எனக்கூறி, தாங்கள் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை, இஸ்ரேல் ராணுவம் நீக்கியது

🕔 November 16, 2023
இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பிறகு நீக்கப்பட்ட வீடியோவின் ‘ஸ்கிறீன் ஷொட்’

காஸாவிலுள்ள மிகப் பெரிய வைத்தியசாலை அல் ஷிபா மீது – இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேலியப் படையினர் மீண்டும் வைத்தியசாலைக்குள் நுழைந்து – அதன் தெற்கு நுழைவாயிலை புல்டோசர் மூலம் இடித்துள்ளனர்.

இஸ்ரேலியப் படைகள் நேற்றிரவு (15) அல் ஷிஃபா வைத்தியசாலைக்குள் நுழைந்து 12 மணி நேரம் நீடித்த நடவடிக்கையில் ஈபட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த வைத்தியசாலையை ராணுவ நோக்கங்களுக்காக ஹமாஸ் பயன்படுத்துகிறது என இஸ்ரேல் கூறிவந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்கு இஸ்ரேல் தவறியுள்ளது.

இந்த நிலையில் அல் ஷிஃபா வைத்தியசாலையில் ஹமாஸின் ஆயுதங்கள் இருப்பதாக கூறி, அதற்கான ஆதாரம் எனக்காட்டும் வீடியோவை நேற்று (15) தமது ட்விட்டர் தளத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டிருந்தது. ஆயினும் பின்னர் அதனை அதனை நீக்கியுள்ளது.

அந்த பதிவை நீக்கியதற்கான எந்த விளக்கத்தையும் இஸ்ரேல் ராணுவம் இதுவரை வெளியிடவில்லை.

அல் ஷிபா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை பல மணி நேர சோதனையின் போது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியதை ஹமாஸ் நிராகரித்ததது.

இந்தந நிலையில் அல்-ஷிஃபா வைத்தியசாலை வளாகத்தில் வியாழக்கிழமை முன்னிரவு மற்றொரு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக – வைத்தியசாலையின் உள்ளே இருக்கும் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார் என, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அல் ஷிபா வைத்தியசாலை வளாகத்தினுள் இஸ்ரேலிய ராணுவம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்