நல்லாட்சியாளர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்: கோட்டா கொதிப்பு

🕔 January 31, 2016
Gotta - 0987யர்மட்ட அரசியல்வாதிகளைப் பழிவாங்குவதற்காக, 25 வயதான மகனை கைது செய்வது ஏற்புடையதல்ல என்று மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ஷவின் கைது குறித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது;

“நல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்.

தற்போதைய அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருகின்றது. உயர்மட்ட அரசியல்வாதிகளுக்காக 25 வயதான மகனை பழிவாங்குவது ஏற்புடையதல்ல.

யோசிதவை படையில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததே நான்தான்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு எதுவும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்