இந்தோனேசிய கடலில் பாரிய நில நடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பு இல்லை

🕔 November 8, 2023

ந்தோனேசியாவின் பண்டா கடலில் (Banda Sea) 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பண்டா கடலில் இன்று (08) நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது, சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.

இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. முதலில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நில நடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 11:53 மணிக்கு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு நொவம்பரில், நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் மக்கள் தொகை கொண்ட மேற்கு ஜாவா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதில் 602 பேர் கொல்லப்பட்டமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்