அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்

🕔 October 30, 2023

ரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெற்ற போது – ஜனாதிபதி இந்த விடயத்தை அங்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக – இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என, அவர் குறிப்பிட்டதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக கோரப்படும் என்றும் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

(நன்றி – அய்வரி)

Comments