
இஸ்ரேலிய தாக்குதல்களால் ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் பலஸ்தீனில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பில் காஸாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் கடந்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 5,087 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 2,055 குழந்தைகளும், 1,119 பெண்களும் அடங்குவர்.
மேலும் 15,273 பேர் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 12 மருத்துவமனைகளும் 32 சுகாதார நிலையங்களும் செயல்படாமல் போயுள்ளன.
830 குழந்தைகள் உட்பட சுமார் 1,500 பேர் இன்னும் இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் உள்ளனர்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் 57 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 100 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 182 குழந்தைகள் உட்பட 436 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.





