ஹமாஸ் ஆயுதப் படையின் மூத்த தளபதி அய்மன் நோஃபல், இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு

🕔 October 17, 2023
அய்மன் நோஃபல் (வலமிருந்து இரண்டாமவர்), பிப்ரவரி 5, 2011 அன்று, மத்திய காஸா பகுதியிலுள்ள அவரின் வீட்டிற்கு வந்தபோது எடுக்கப்பட்ட படம்

மாஸின் மூத்த தளபதி அய்மன் நோஃபல் (Ayman Nofal) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளதாக, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

பொது ராணுவக் குழுவின் உறுப்பினரும், மத்திய படைப்பிரிவின் தளபதியுமான அபு அஹமது எனப்படும் அய்மன் நோஃபல் – மத்திய காஸா பகுதியில் உள்ள அல்-புரிஜ் முகாமில் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் ஆயுதப் பிரிவு ரெலிகிராமில் தெரிவித்துள்ளதாகவும் அல் ஜசீராவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸ் எல்-தீன் அல்-கஸ்ஸாம் படையின் – மத்திய காஸா பகுதிக்கான பொறுப்பாளராக உயிரிழந்த அய்மன் நோஃபல் இருந்தார்.

இதேவேளை, காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் குறைந்தது 2,808 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகளாவர்.

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்