இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி

🕔 October 14, 2023
காஸா நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் உடல் வைத்தியசாலை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது

ஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, அல் ஜசீறா செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடக்குகின்றனர்.

காஸா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் மக்கள் மீது இஸ்ரேல் இந்த விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக

இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, காஸாவிலுள்ள 1.1 மில்லியன் குடியிருப்பாளர்களை காஸாவின் தெற்கே செல்லுமாறு இஸ்ரேல் கூறியதை அடுத்து, காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி வருகிறது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காஸா மீதான இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் குறைந்தது 2,215 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 8,714 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,300 ஐ எட்டியுள்ளது, 3,400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், கடந்த வாரத்தில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50ஐத் தாண்டியுள்ளது. 1,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். டசன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்