இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

🕔 October 10, 2023

ஸ்ரேலில் தேசிய தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய தொலைக்காட்சியில் தோன்றி – அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெதன்யாகு இதன்போது கூறியுள்ளார்.

1967ஆம் ஆண்டு 06 நாட்கள் நடைபெற்ற ‘மூன்றாவது அரபு – இஸ்ரேலி’ என்று அழைக்கப்படும் போரின் போது – அப்போதைய பிரதம மந்திரி மெனகெம் பிகினுடன் உருவாக்கப்பட்ட தேசிய அவசரகால அரசாங்கத்தை போன்று, உடனடியாக அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு – நெதன்யாகு இதன்போது அழைப்பு விடுத்தார்.

நெதன்யாகு ஏற்கனவே நாடு ‘போரில்’ இருப்பதாகக் கூறியதுடன், உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருட்களை சேமித்து வைக்குமாறும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

காஸாவை தளமாகக் கொண்ட எதிர்ப்புக் குழுவான ஹமாஸ் சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமைக்கும், குடியேற்றவாசிகளின் வன்முறை அதிகரித்து வருவதற்கும் பதிலடியாக இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் கூறியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்