இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம்

🕔 October 10, 2023

காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.

சயீத் அல்-தவீல் மற்றும் முகமது சோப் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரவு முழுவதும் குண்டுகளை வீசியது.

இந்த நிலையில் காசாவுக்கான உணவு மற்றும் எரிபொருளை அனுமதிப்பதற்கான தடையை ஏற்படுத்தி, மக்களைப் பட்டினி போடும் நோக்கத்துடன் இஸ்ரேலிய ராணுவம் முற்றுகையொன்றை மேற்கொண்டிருப்பதாகவும், இத்தகைய முற்றுகை – ஐக்கிய நாடுகள் சபை சட்டங்களின்படி போர்க்குற்றமாகும் எனவும் அல் ஜெஸீரா வெளியிட்டுள்ள செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஸாவில் 704 பேரும், இஸ்ரேலில் 900 பேரும் – நடைபெற்று வரும் தாக்குதல்களில கொல்லப்பட்டுள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் 04 ஹிஸ்புல்லா போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனான் எல்லையில் நடந்த மோதலில் இஸ்ரேலிய ராணுவத்தின் துணைத் தளபதி உயிரிழந்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்