மு.காங்கிரஸிலிரிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கப்பட்டமை செல்லுபடியாகும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எம்.பி பதவியும் பறிபோகிறது

🕔 October 6, 2023

– மப்றூக்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் – அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை செல்லுபடியாகும் என, உச்ச நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான ஹாபிஸ் நசீர் அஹமட், கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக மு.காங்கிரஸ் அறிவித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் நிலை உருவாகும்.

இந்த நிலையில் கட்சியிலிருந்து தன்னை நீக்கியமையினை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் – உச்ச நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தார்.

இந்தப் பின்னணியிலேயே ஹாபிஸ் நசீரை கட்சியிலில் இருந்து நீக்கியமை செல்லுபடியாகும் என, இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக்கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டிருந்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் உள்ள நிலையில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் – சுற்றாடல் துறை அமைச்சராக தற்போது பதவி வகிக்கின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்