அட்டாளைச்சேனை – முல்லைத்தீவில் சொத்துக்களுக்கு யானைகளால் சேதம்: அதிகாரிகளுக்கு அறிவித்தும் பலனில்லை

🕔 October 4, 2023

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக பொதுமக்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாக முறையிடப்படுகிறது.

ஏற்கனவே முல்லைத்தீவு – பாவங்காய் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றினை – யானையொன்று உடைத்து சேதப்படுத்தியிருந்தது. இது குறித்து அதன் உரிமையாளர் பிரதேச செயலகத்துக்கு முறையிட்டுமிருந்தார்.

அதன் பின்னரும் யானையின் அட்டகாசம் தொடர்வதாக மக்கள் கூறுகின்றனர்.

இது மட்டுமன்றி, வளவுகளின் சுற்று மதிலை உடைத்துச் சென்று, அங்குள்ள பெறுமதியான தென்னை மரங்களையும் யானைகள் சேதப்படுத்திச் சென்றுள்ளன.

இது குறித்து பலமுறை தொலைபேசியில் பிரதேச செயலாளர் மற்றும் வனவிலங்குத் திணைக்களத்தினருக்கு அறிவித்தும் – உரிய நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.

இவ்வாறு சேதங்களை விளைவிக்கும் யானைகள், பகல் வேளைகளில் அருகிலுள்ள புதர்கள் மற்றும் வயல் பகுதியிலேயே உலவித் திரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்