இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் ராஜிநாமா

🕔 October 4, 2023

லங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் முஹமட் உவைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் நேற்று (03) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று அவரின் கடைசி நாளாக குறித்த பதவியில் உவைஸ் இருப்பார் என, அமைச்சர் கஞ்சன தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மரியாதை நிமித்தமாக நேற்று அமைச்சரை உவைஸ் சந்தித்துள்ளார்.

’14 மாதங்களுக்கு முன்பு எனது கோரிக்கையின் பேரில், மிகவும் சவாலான சூழ்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதற்காகவும், அவருடைய பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் சேவைகளுக்காகவும் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ எனவும், ட்விட்டரில் அமைச்சர் கஞ்சன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முஹமட் உவைஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments