பாலுறவில் ஈடுபட்ட சிறுவயது சோடிகள், பொலிஸாரின் சோதனையில் சிக்கினர்: பின்னர் நடந்தவை என்ன?
ஹோமாகமவில் உள்ள ‘பார்க்’ (Park) ஒன்றிலுள்ள அறைகளில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையொன்றின் போது, பாலுறவில் ஈடுபட்ட வயது குறைந்த 24 சோடிகள் அகப்பட்டனர்.
குறித்த இடத்தில் குறைந்த சிறுவர்கள் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், ஹோமாகம பொலிஸார் நேற்று (24) இந்த சோதனையை மேற்கொண்டதில் இவர்கள் அகப்பட்டனர்.
பெற்றோர்கள், மத முக்கியஸ்தர்கள் ஆகியோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, ஹோமாகம நீதவான் வழங்கிய தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.
இந்த ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் ஆடைகள் இல்லாத நிலையில் இருந்ததாகவும் சிரேஷ்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி – வீட்டை விட்டு வெளியேறியவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சோடிகளின் பெற்றோரை பொலிஸார் வரவழைத்து கடுமையாக கண்டித்த பின்னர் அவர்களை ஒப்படைத்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளவும், அவர்கள் இவ்வாறு தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்கவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த நிறுவனத்துக்குப் பொறுப்பான நபர் ஒருவர் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.