பயணித்த பஸ்ஸை நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார்

🕔 September 24, 2023

லங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் சாரதியொருவர் கடமை நேரத்தில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பகுதியில் வைத்து 46 வயதுடைய பஸ் சாரதி ஒருவர் இன்று (24) காலை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை, வேன் ஒன்றில் வந்த சிலர் மறித்து சாரதியை கடத்திச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பஸ் சாரதி வத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்