மரணச் சடங்கில் கலந்து விட்டுத் திரும்பிய நால்வர் மீது துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம்

🕔 September 21, 2023

விசாவளையில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணச் சடங்கு ஒன்றில் கலந்து விட்டு, முச்சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த நால்வரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி-56 துப்பாக்கியால் முச்சக்கரவண்டி மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த இருவரும் 27 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும், காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்