சுனாமி போன்ற லிபிய வெள்ளத்தில் 2300 பேர் பலி: 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை

🕔 September 13, 2023

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 2,300 பேர் இறந்துள்ளனர் என்றும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் எனவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளம் சுனாமி போன்று ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்கள் அங்கு வீதியோரங்களில் வைக்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளன.

ஞாயிற்றுக்கிழமையன்று ‘டேர்னா’ நகரை ‘டேனியல்’ புயல் தாக்கியபோது 2 அணைகளும் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிட்டன.

ஏராளமான மக்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மற்றவர்கள் வீட்டின் மேல் தளங்களிலும் மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து லிபியாவுக்கு எகிப்து உட்பட சில அண்டை நாடுகளில் இருந்து சில உதவிகள் வரத் தொடங்கியுள்ளன.ஆனால் லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. நாட்டில் இரண்டு போட்டி அரசாங்கங்கங்கள் ஆட்சி செய்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்கள் வீதியோரத்தில் வைக்கப்பட்டுள்ளன

Comments

புதிது பேஸ்புக் பக்கம்