அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

🕔 August 29, 2023

‘அஸ்வெசும’ பயனாளர்கள் 1.5 மில்லியன் பேருக்கு, கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரவளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் முதல் கட்டமாக மட்டும், 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 4.395 பில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன” எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அஸ்வெசும தொடர்பில் அவசர தொலைபேசி எண் 1924 க்கு அழைத்துப் பேச முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாளை பொது விடுமுறை தினமாக உள்ளபோதும், அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு, அரச வங்கிகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்