நாட்டில் 216 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

🕔 August 22, 2023

நாட்டில் 216 மருந்துகளுக்கான பற்றாக்குறையை உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

பற்றாக்குறை சற்று முன்னேற்றமடைந்துள்ள போதிலும், எஞ்சியுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, எதிர்வரும் மாதங்களில் பற்றாக்குறையை 100க்கும் கீழ் குறைக்க வேண்டியுள்ளது என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார்.

14 உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என, டொக்டர் ரத்நாயக்க உறுதியளித்தார். தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 1,300 மருந்துகளில், 383 அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது.

“இருப்பினும், தற்போது 216 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றை விரைவில் வாங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments