நாடாளுமன்ற குழு அறைக்குள் தலையணை, மெத்தைகள் காணப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம்

🕔 August 17, 2023

நாடாளுமன்றக் குழு அறைக்குள் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர இன்று (17) தெறிவித்தார்.

நாடாளுமன்றத்தின் பராமரிப்புத் துறை தொடர்பாக ஜூலை 30ஆம் திகதி மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்த மூன்று மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பெண் பணியாளர்கள் – மூத்த அதிகாரிகளால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்துஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஓகஸ்ட் மாத முற்பகுதியில் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய ரோஹினி குமாரி விஜேரத்ன எம்.பி, சம்பவங்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட அதிகாரிகளால் – குறித்த பெண் பராமரிப்பாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தினார்.

மேற்படி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ஒருவர் ஏற்கனவே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற பராமரிப்புப் பெண்களை உத்தியோகத்தர்கள் எவரேனும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்