சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை

🕔 January 25, 2016

Uthumalebbe - 01– றியாஸ் ஆதம் –

கிழக்கு மாகாண தமிழ் மொழிப்பாடசாலைகளில் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரும் கோரும் தனிநபர் பிரேரனையை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை  நாளை செவ்வாய்கிழமை சமர்ப்பிக்கவுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழிப்பாடசாலைகளில் 02வது மொழியான சிங்களப் பாடத்தினை கற்றுக் கொள்வதற்காக, சிங்கள நூல்கள் வருடா வருடம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும், தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்களப் பாடத்துக்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால், இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் வருடா வருடம் வழங்கப்பட்டு வரும் சிங்கள நூல்களைப் பயன்படுத்த முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

எனவே, நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையில், கிழக்கு மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில், சிங்கள மொழிக்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை, கிழக்கு மாகாணசபை மேற்கொள்ள வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையைக் கோரும் இத் தனிநபர் பிரேரனையை, நாளை செவ்வாய்கிழமை  நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் 52வது அமர்வில், எம்.எஸ். உதுமாலெப்பை சமர்ப்பிக்கவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்