ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

🕔 January 25, 2016

Gnanasara thero - 01பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு வழங்க்பட்டது.

ஊடகவியலாளர் பிரகீத்தின் எக்னலிகொட மனைவி சந்தியாவுக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர்மீது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்