இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ள நினைத்தால் அது தவ­றாகும்: அமைச்சர் ஹக்கீம்

🕔 January 25, 2016

Hakeem -097– ஏ.ஆர்.ஏ. பரீல் – 

நாட்டு மக்­க­ளி­டையே சில குழுக்கள் அச்ச நிலையை உருவாக்கி அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்­றன. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர் விவ­கா­ரத்தை இவ்­வாறே பார்க்க வேண்டியுள்­ளது. ஆனால் அவ்­வா­றான முயற்­சி­க­ளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இட­ம­ளிக்­காது என நகர திட்­ட­மிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­யகம் தாருஸ்­ஸலாமில் நேற்­று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸின் புதிய தொழிற்­சங்­க­மான, தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற் சங்கத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இதன்போது தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்­கத்தின் தலை­வ­ராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

‘சிங்ஹ லே’ போன்ற ஸ்டிக்கர் குழுக்­க­ளினால் நாம் பீதிக்­குள்­ளாக வேண்­டி­ய­தில்லை. நாட்டில் இன­வா­தத்தை உரு­வாக்க முயற்­சித்த குழுக்­க­ளுக்கும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் கடந்த காலங்­களில் என்ன நடந்­தது என்­பது அவை­ருக்கும் தெரியும். அப்­ப­டி­யா­ன­வர்கள் மீண்டும் இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ளலாம் என்று நினைத்தால் அது தவ­றாகும்.

தற்­போது ‘சிங்ஹ லே’ ஸ்டிக்­கர்­க­ளினால் தேவை­யற்ற பீதியை உரு­வாக்கி வரு­கி­றார்கள். இது தொடர்­பாக இன்­று­வரை நான் வாய் திறக்­க­வில்லை. வாய் திறந்­தி­ருந்தால் என்னை இனவாதியென்றும் நான் இன­வா­தத்தைப் பரப்­பு­வ­தா­கவும் தவ­றான கருத்­து­களைப் பரப்­பு­வார்கள்.

இத­னா­லேயே வாய் திறக்­க­வில்லை. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்­க­ருக்குப் பதி­ல­ளிக்கும் முக­மாக ‘அபித் சிங்ஹ லே’ (நாங்­களும் சிங்ஹ லே) என்ற ஸ்டிக்­கரை வெளி­யி­டலாம் என்றும் எண்ணியிருந்தேன். இது அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான முயற்­சி­யாகும்.

கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் கிறீஸ் மனிதன் (கிறீஸ் யகா) சம்பவங்கள் மக்­களை பெரும் பீதிக்­குள்­ளாக்­கின. இந்த சம்­ப­வங்கள் ஏன் நடந்­தன என்று இது­வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்­கான காரணம் அறி­யப்­ப­ட­வில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபித்­துள்ள தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்கம் மறைந்த எமது தலைவர் அஷ்­ரபின் கன­வாகும். தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தேவை 1999 லிருந்து பேசப்பட்டு வந்­தது. இன்று அது ஒரு தொழிற்­சங்­க­மாக நிறை­வே­றி­யுள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை ஒரு இன­வாதக் கட்சி என்றே கூறு­கி­றார்கள். அவ்வாறில்லை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கா­க­ இந்த புதிய தொழிற்­சங்கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. சாதி, சமய, மொழி பேதங்­க­ளற்ற ஒரு புதிய அர­சியல் கலா­சாரம் இந்த தொழிற்­சங்கம் மூலம் உரு­வாக்கப்­படும்” என்றார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்