ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம்

🕔 August 2, 2023

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெனாண்டோ மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைநிறுத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருவரும் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் 2020 பொதுத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையை அடுத்து, இருவரும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்