கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி

🕔 July 24, 2023

கிழக்கு மாகாணத்தில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான அனுமதியை ஆளுநருக்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் இன்று (24) நடைபெற்ற கலந்துரையாடலின் போது – இந்த அனுமதி கிடைத்ததாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில், கடந்த சில மாதங்களாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கவனத்துக்கு – ஆளுநர் செந்தில் தொண்டமான் கொண்டு சென்றிருந்தார்.

அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தேவையான அனுமதிகளை ஆளுநருக்கு சுசில் பிரேமஜயந்த வழங்கியுள்ளார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, ஆசிரியர் நியனத்துக்கு தெரிவு செய்யப்படாத – உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளை நியமிப்பது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்