பொதுமக்களுடன் சினேகமாகப் பழகும் பிரதம பொலிஸ் பரிசோதகர் மஜீத்: சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

🕔 July 14, 2023

– ஏ.எல். ஆஸாத் (சட்டத்தரணி)

க்கரைப்பற்றுபொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய, பிரதம பொலிஸ் பரிசோதகர் மீராசாஹிப் அப்துல் மஜீத் இன்று (14) தனது 60வது வயதைப் பூர்த்தியடைந்ததன் காரணமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத், 1985ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்தார்.

இவர் தனது சேவைப் பயிற்சியை மஹியங்கனை ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நிறைவுசெய்தமையை அடுத்து, கல்குடா பொலிஸ் நிலையத்தில் தனது முதலாவது நியமனத்தைப் பெற்றார்.

இதனைத்தொடர்ந்து கொழும்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியமாவட்டங்களிலுள்ள பலபொலிஸ் நிலையங்களில் தனது சேவையைதொடர்ந்தார்.

அத்தோடு 1994ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை, விசேட அதிரடிப்படையில் இணைக்கப்பட்டு, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் மல்வத்தை விசேட அதிரடிப்படை முகாம்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றினார்.

மீண்டும் 2000ஆம் ஆண்டு தொடக்கம் பொலிஸ் பிரிவுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இவர் கடமையாற்றிய பிரதேசங்களில் பொதுமக்களுடன் சினேகபூர்வமாக பழகியதன் காரணமாக பலகுற்றச் செயல்களை இணங்கண்டதுடன், குற்றச் செயல்களைத் தடுக்கவும் குற்றவாளிகளை கைதுசெய்யவும் இவரால் முடிந்தது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீதுக்கான பிரியாவிடைநிகழ்வு, அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் பண்டார வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜயதுங்க பண்டார தலைமையில் இன்று (14) அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அவரை கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு, அவரின் சேவையைப் பாராட்டி தமது நன்றி கலந்த வாழ்த்துக்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments