தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

🕔 July 14, 2023

நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைக்கவும், நீதி முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இலங்கையில் ‘மனு பேரம்பேசும் சட்டத்தை’ (Plea Bargaining law) அறிமுகப்படுத்த – நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (13) தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் 11,27000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அறிமுகப்பதவுள்ள புதிய சட்டம் – வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆய்வு செய்து சட்டத்தை உருவாக்க நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த விஷயத்தில் வெளிநாட்டு நிபுணர்கள், தமைமை நீதியரசர், சட்ட மா அதிபர் ஆகியோரினதும் சட்டத்தரணிகள் சங்கத்தினதும் பங்கேற்புடன் நாங்கள் பல பயிலரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 97 சதவீத வழக்குகள் மனு பேசுரம்பேசும் விசாரணையில் முடிவடைகின்றன என, அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“இந்த முறை இலங்கையில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் மனு பேரம்பேசும் விசாரணையில் – குற்றத்தை ஒப்புக் கொள்ளும் குற்றவாளிகள், குறைக்கப்பட்ட தண்டனைகளைப் பெறுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அந்த உத்தரவாதத்தை வழங்க சட்டத்தில் விதிகளை சேர்க்க வேண்டும்” என அவர் கூறினார்.

Comments