பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம்

🕔 June 19, 2023

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம – பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஓகஸ்ட் 01, 2023 முதல் அமுலுக்கு வருகிறது.

இவர் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுள்ள பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

ரோஹித போகொல்லாகம 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் பணியாற்றினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்