ஜனாதிபதிக்கு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை

🕔 June 14, 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே, அந்தக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு கடுமையாக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் ஊடகங்களிடம் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளைக் கோரியுள்ளபோதிலும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் அதனை வழங்கவில்லை.

இந்த நிலைியல் அண்மையில் ஜனாதிபதியால் கூட்டப்பட்ட அரசாங்கத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தையும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

இந்தப் பின்னணயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த; ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் நடத்தை குறித்து கடுமையாக சாடினார்.

ஜனாதிபதியை ஓரம்கட்டும் எண்ணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இல்லை என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைவிட முற்பட்டால் அவருக்கு தமது ஆதரவை வழங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்