யூரியா உர மூட்டை 05 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

🕔 June 12, 2023

யூரியா உர மூட்டை ஒன்று ரூ.5,000க்கும் குறைவான விலையில் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எதிர்வரும் பெரும் போகத்திலில் இருந்து விவசாயிகளுக்கு மேற்படி விலைக்குறைப்புடன் யூரியா கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூன்று போகங்களுக்குப் பின்னர் எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு மூன்று வகையான உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த வார இறுதியில் 22,500 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்ததாகவும், இன்று (12) முதல் அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் உரம் விடுவிக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்