புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணத் தொகை சடுதியாக அதிகரிப்பு
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பியுள்ள பணத்தொகை, கடந்த மே மாதம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி – மே ) நாட்டுக்குக் கிடைத்த மொத்த பணத்தொகை 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 75.7 சதவீதம் அதிகமாகும்.
நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெடுப்புவதற்கு – இலங்கையின் வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் முக்கிய பலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.