மின் கட்டணம் குறைகிறது: யாருக்கு, எவ்வளவு எனும் விபரங்களும் அறிவிப்பு

🕔 June 12, 2023

மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜூலை மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்குட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டணக் குறைப்பிற்கமைய, 0 முதல் 30 மின் அலகுகளுக்கான கட்டணம் 26.9 சதவீதம் குறைக்கப்படும். மேலும், 31 முதல் 60 மின் அலகுகளுக்கான மின் கட்டணம் 10.8 சதவீதமும், 61 முதல் 90 மின் அலகுகளுக்கான மின் கட்டணம் 7.2 சதவீதமும், 91 முதல் 180 மின் அலகுகளுக்கான மின் கட்டணம் 3.4 சதவீதமும் குறைக்கப்படவுள்ளது.

இது தவிர, 180 மின் அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவின் கட்டணம் 1.3 சதவீதம் குறைக்கப்படும். மத ஸ்தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மின்சாரக் கட்டணம் சுமார் 3.2 வீதத்தால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சாலைகள், பொதுப்பிரிவுகள், தெருவிளக்குகள் மற்றும் அரசு நிறுவனங்களின் வகைக் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் தொழில்துறையின் மின்சாரக் கட்டணம் 12.6 வீதத்தால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்