லஞ்சம் பெற்ற போது கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் கைது

🕔 June 6, 2023

மநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் லட்சம் ரூபா லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அலவத்துகொட நிலையத்தைச் சேர்ந்தவர்களாவர்.

அலவத்துகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்கமந்தெனியவில் நெற்செய்கை காணி ஒன்றுக்கு மறுசீரமைப்பு சான்றிதழ் வழங்க சந்தேகநபர்கள் இருவரும் 01 லட்சம் ரூபா லஞ்சம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஞ்சம் வாங்கும் போது, விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளரரும், பிராந்திய விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரும் இதன்போது பிடிபட்டனர்.

சந்தேகநபர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்