அலி சப்ரியின் இடத்தைப் ‘பிடித்த’ கோட்டா

🕔 June 5, 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வந்த அரச இல்லத்திலிருந்து, அவர் வேறொரு இடத்துக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியேறிய வீடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த இடமாகும்.

மலலசேகர மாவத்தையில் தான் வசித்த வீடு அமைந்துள்ள பகுதியில் அதிக சத்தம் உள்ளதாகத் தெரிவித்தே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய இடத்துக்குச் சென்றுள்ளார்.

பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒட்டி அமைந்துள்ள இல்லமொன்றுக்கே தற்போது அவர் சென்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தற்போது குடிபுகுந்துள்ள வீடு, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் அலி சப்ரியுடன் இது குறித்து அரசாங்க முக்கியஸ்தர்கள் பேச வேண்டியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி பதவி வகித்த போது அவருக்கு வழங்கப்பட்ட அதேயளவு நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்புக் குழுவினரை தற்போதும் வைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை ‘சன்டே டைம்ஸ்’ வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்