இலங்கையிலிருந்து செல்லும் முதலாவது ஹஜ் குழுவுக்கு பிரியாவிடை: சஊதி தூதுவரும் கலந்து கொண்டார்

🕔 June 4, 2023

லங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களின் முதலாவது குழுவுக்கான பிரியாவிடை – இன்று (04) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சஊதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி கலந்து கொண்டார்.

இந்தக் குழுவில் 63 பேர் உள்ளடங்குகின்றனர்.

இதன்போது அங்கு உரையாற்றிய சஊதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி; உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இறைவனின் விருந்தினர்களாக வருகின்றவர்களுக்கு தனது அன்பான வரவேற்பைத் தெரிவித்தார்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரின் அரசாங்கம் – சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் இல்லத்தின் யாத்திரீகர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

யாத்திரீகர்களின் வசதியை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன எ்ன்றும், அவர்கள் ஹஜ் கடமையை எளிதாக செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

மேலும், இலங்கை ஹஜ் யாத்திரீகர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதில் தூதரகம், சமய விவகார அமைச்சு மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் அதிகாரிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பினையும் அவர் பாராட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்