எரிபொருள்களுக்கு இன்றிரவு விலை குறைகிறது?
எரிபொருளுக்கான புதிய விலைகள் இன்று (31) அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணைக்கான விலை குறைந்தமை மற்றும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமை போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டு எரிபொருளுக்கான விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் அதன் பலன் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டுமெனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளாதாக மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைவடையவுள்ளன.