புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு

🕔 May 26, 2023

புத்தளத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரை தாக்கியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலை ஆசிரியரின் வீட்டுக்கு கல்லெறிந்த மாணவர்கள், அவரை தாக்கினர். கடந்த 23ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது.

தொடர்பில் 04 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் நேற்று 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் அனைவரும் இன்று (26) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது..

இதன்போது, சந்தேக நபர்களுக்கு 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணை சாதாரண தர பரீட்சை முடிந்தவுடன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் – ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.

மேலும், எந்த காரணத்திற்காகவும் முறைப்பாட்டாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், பிணை ரத்து செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்