பிரதியதிபர் மீது துப்பாக்கிச் சூடு

🕔 May 26, 2023

லப்பிட்டிய நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இன்று (26) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவரே – துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பலபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்