அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு குளிசை பக்கட் அன்பளிப்பு: தொடர்ச்சியாக உதவி கோருகிறார் அபிவிருத்திக் குழு செயலாளர்

🕔 May 21, 2023

– முன்ஸிப் –

ட்டாளைச்சேனை பிரதச வைத்தியசாலைக்கு தேவையாகவுள்ள – ஒரு தொகுதி குளிசை பக்கட்களை அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இயங்கி வரும் – ஐ.எல்.எஸ் (ILS) மல்டி சென்ரர் நிறுவனம் அன்பளிப்புச் செய்துள்ளது.

குறித்த குளிசை பக்கட்களை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.எம். வபா விடம் இன்று (21) வைத்தியசாலையில் வைத்து – ஐ.எல்.எஸ் நிறுவன உரிமையாளர் ஐ.எல். சர்ஜுன் கையளித்தார்.

இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளரும் வங்கி உத்தியோத்தருமான எம்.ஐ. நபீல், அபிவிருத்தி குழு உறுப்பினர் மூத்த சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், ஆசிரியர் எம்.ஏ.எம். பௌஸ் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் குளிசைகளை பக்கட்களில் வழங்க முடியாத நிலை ஏற்படும் போது, கடதாசிகளில் சுற்றி குளிசைகள் வழங்கப்படும்.

இந்த நிலையில் வைத்தியசாலைக்கு அவ்வப்போது குளிசை பக்கட்கள் அன்பளிப்பாகக் கிடைப்பதுண்டு.

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு நாளொன்று ஆகக்குறைந்தது 1000 குளிசைப் பக்கட்கள் தேவையாக உள்ளன.

எனவே உதவ முடிந்தோரிடமிருந்து இவ்வாறான அன்பளிப்புகளை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக, அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் நபீல் கோரிக்கை விடுக்கின்றார்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு ‘ஆவி பிடிக்கும் சாதனம்’: சொந்த நிதியிலிருந்து நபீல் அன்பளிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்