தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ்

🕔 May 18, 2023

லங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது அவுஸ்ரேலிய நீதிமன்றில் சுமத்தப்பட்ட நான்கு பாலியல் புணர்வு குற்றச்சாட்டுகளில், மூன்று குற்றச்சாட்டுகள் இன்று (18.05.2023) கைவிடப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழக்கு இன்று (18.05.2023) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு 20/20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த நிலையில், தனுஷ்கவுக்கு முதல் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப்புற நகரிலுள்ள அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்ற தனுஷ்க, அந்தப் பெண்ணின் அனுமதி இல்லாமல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத் கைது செய்யப்பட்ட தனுஷ்க – தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கடும் நிபந்தனைகளுடன் தனுஷ்கவுக்கு பிணை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்