ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஹரிசன் ஆதரவு: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் விரைவில் இணைவார்கள் எனவும் தெரிவிப்பு

🕔 May 14, 2023

முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட தலைவருமான பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

நாட்டுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்த ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

“அரசியல்வாதியால் பொதுவெளிக்கு வந்து – கூட்டம் நடத்த முடியாத ஒரு காலம் இருந்தது. ஆனால் ரணில்் விக்கிரமசிங்க எல்லாவற்றையும் மாற்றி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தினார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை “ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுமார் 20 பேர் – விரைவில் ஜனாதிபதியுடன் இணைவார்கள்” என, அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்