நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரை மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெறுமாறு உத்தரவு

🕔 May 13, 2023

– முன்ஸிப் அஹமட் –

நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரொருவரை – மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நேற்று (12) நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, மன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரொருவர் நீதவானை நோக்கி பாதணியை வீசிமையினால் மன்று பரபரப்பானது.

திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, அவர் நீதவானை நோக்கி பாதணியை வீசினார்.

இந்த நிலையில், குறித்த நபர் தனக்கு மனநோய் உள்ளதாகவும், அதனாலேயே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் மன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து அவரை மனநல மருத்துவரிடம் காண்பித்து – அறிக்கை பெற்று, அதனை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, சம்பந்தப்பட்ட நபரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறும் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்