இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத் தொகை அதிகரிப்பு

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2023 ஏப்ரல் மாதம் நாட்டுக்கு அனுப்பிய பணம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (இலங்கைப் பெறுமதியில் 14,243 கோடி ரூபா) பதிவாகியுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
2022 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் இது 83.4% அதிகரிப்பாகும் என்றும், 2022 ஏப்ரல் மாதம் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் 248.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மொத்தமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட தொகை 1867.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கைப் பெறுமதியில் 58,579 கோடி ரூபா) எனவும் தெரிவித்துள்ளார்.