05 ஆயிரம் முச்சக்கர வண்டிகளை மின்சார இயக்கத்துக்கு மாற்றும் இலவச திட்டம்: யாரெல்லாம் பயனடைய முடியும் எனவும் தெரிவிப்பு

🕔 May 12, 2023

– அஷ்ரப்.ஏ சமத் –

ந்தாயிரம் முச்சக்கர வண்டிகளை – ஐந்து வருடங்களுக்குள் மின்சார வாகனங்கள் அல்லது இலத்திரனியல் இயக்கத்தில் – மாற்றும் திட்டம் நேற்று (11)ஆம் பிலியந்தலையில் உள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரநிதி அசுசா குபோடா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் புறக்கோட்டை, மாகும்புர கொட்டாவைப்பிரதேசத்தில் 200 முச்சக்கர வண்டிகள், மின்சார இயக்கத்திற்கு மாற்றப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இலவச நிதி உதவி வழங்கியுள்ளது.

இவ்வாறு இயக்கம் மாற்றப்பட்ட பின்னர், முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் குறைக்கப்படும்.

இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்படும் முச்சக்கர வண்டிகள் 10 வருடங்களுக்குள் உ ற்பத்தி செய்யப்பட்டதாகவும், 4 ஸ்ரோக் கியர் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.

மேலும், தமது குடும்ப வருமானத்துக்காக முச்சக்கர வண்டி ஓட்டுவதைத் தொழிலாகக் கொண்டவராக இருத்தல் அவசியமாகும்.

ஊனமுற்றோர் , பெண்கள் முச்சக்கர வண்டி உரிமையளாராக இருப்பின் அவ்வாறவனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டப் பிரநிதி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்