லிற்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

🕔 May 2, 2023

லிற்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் – நாளை (03) நள்ளிரவு தொடக்கம் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய லிற்ரோ எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இந்த விலைகுறைப்பு விகிதத்துக்கு அமைய, ஏனைய எடையுடைய சிலின்டர்களுக்கும் விலை குறைக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 05ஆம் திகதி லிற்ரோ நிறுவனமும், மறுநாள் லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலைகளைக் குறைத்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தையில் எரிபொருளுக்கான விலைகள் குறைந்துள்ளமையினை அடுத்து, எரிவாயுவின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்