உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு

🕔 April 19, 2023

சீனாவின் சனத்தொகையை இந்தியா முந்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலகின் அதிக சனத் தொகை கொண்ட நாடாக சீன இருந்து வந்த நிலையிலேயே, தற்போது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்திய பதிவாகியுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை – சீனாவை விட 30 லட்சம் கூடுதலாக இருக்கும்.

இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 142.86 கோடி எனவும் சீனாவின் மக்கள்தொகை 142.57 கோடி என தோராயமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பானது இறுதியாக 2011இல் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் 2021இல் எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொவிட்-19 காரணமாக தள்ளிப்போனது. எனவே, இந்திய மக்கள்தொகையின் உறுதியான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரியவில்லை. எனவே, பல்வேறு தரவுகளை கணக்கில் கொண்டு இந்த முடிவை ஐநா வெளியிட்டுள்ளது.

அதேபோல, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன. இருப்பினும் சமீப ஆண்டுகளாக இரு நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவான வேகத்தில் உள்ளது. குறிப்பாக, சீனாவில் பல ஆண்டுகாலமாகவே மக்கள்தொகை வளர்ச்சியானது கணிசமாக குறைந்துள்ளது.

அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனா கடந்த 20 ஆண்டுகளாக மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்காக கடுமையான விதிகளை பிறப்பித்தது. ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெறக் கூடாது என சட்டம் இயற்றிய சீனாவில் – தற்போது இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்