மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் பலி; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில்

🕔 April 16, 2023

மின்னல் தாக்கியதில் ருவன்வெல்ல பகுதியில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ருவன்வெல்ல – மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றவர்கள் நேற்று மாலை இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்