வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை

🕔 April 16, 2023

திகரித்து வரும் வெப்பநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல், மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னர் உள்ளடக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இதன் தாக்கம் சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெப்ப குறியீட்டு முன்னறிவிப்பு என்பது, ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகின்றது.

இந்த நிலையில், பொதுமக்கள் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வு எடுக்குமாறு வளமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும், இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக பண்டாரவளை, கேகாலை மற்றும் பலாங்கொடை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நேற்றிரவு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்